ஹரியானா கலவரம் || குருகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
school and colleges holiday in hariyana gurugram
ஹரியானா கலவரம் || குருகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
அரியானா மாநிலத்தில் உள்ள குர்கிராம் அருகே நூக் என்ற பகுதியில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியான புனிதநீர் யாத்திரையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு அருகிலுள்ள நதியில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர்.
இதையடுத்து பக்தர்கள் குர்காம்-அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்துக் கொண்டிருந்த போது, ஒரு அமைப்பினர் தகராறு செய்துள்ளனர். இந்தத் தகராறு சிறிது நேரத்தில் கலவரமாக மாறி அருகிலுள்ள வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும், கல்வீச்சு தாக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் விரைந்து வந்து வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். ஆனால், வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்களுக்கும் தீ வைத்ததுடன் துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவும், இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தக் கலவரத்தின் எதிரொலியாக, அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
school and colleges holiday in hariyana gurugram