நடிகர் பவன் கல்யாண் கட்சிக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் கட்சி? தெலுங்கானா அரசியலில் பரபரப்பு!
Telugu Desam Party supporting actor Pawan Kalyan party
ஆந்திரா, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கு தேச கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசாணி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து அவர், தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3.51% வாக்குகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேர்தலுக்காக பவன் கல்யாண் 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Telugu Desam Party supporting actor Pawan Kalyan party