என் மகன் வீரன்.. உங்களால் மீண்டுவிடுவான்.. ஹெலிகாப்டர் விபத்தில் உயிருக்கு போராடும் வீரரின் தந்தை கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


தனது மகன் வருண் சிங் மீண்டு வருவார் என கே பி சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கடந்த 8ஆம் தேதி இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மக்களுடன் ராபர்ட் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருன் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மகனின் உடல்நிலை குறித்து வருண் சிங்கின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரருமான கர்னல் கே பி சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மகனின் உடல்நிலையில் மாற்றம் இருப்பதால் இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார். ஆனால் தலை சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஒட்டுமொத்த தேசமும் அளிக்கும் ஆதரவில் உணர்ச்சி மிகுதியில் இருக்கிறேன் என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வருண்  ஒரு ராணுவ வீரன், போராளி இந்த இக்கட்டிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவான்  எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father is hopeful that Varun Singh will return


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->