மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும்! மிரட்டல் விடுத்த மாணவர் கைது! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்ற வாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு 11-வது நாளாக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கிர்த்தி சர்மா என்ற இளைஞர் பி.காம் 20ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவில், இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்ற பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The student who threatened mamata was arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->