இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா 1925ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.

எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களின் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.

 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்" (Operation smiling buddha) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர். 

இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, years of pilgrimage (1991), the structure of music in raga & western systems (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

இந்திய அணு ஆற்றல் துறைக்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் 2004ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today is the birthday of Indian nuclear expert Raja Ramanna


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->