ஏப்.1 முதல் தேசிய நெடுஞ்சாலைகள் சுங்க கட்டணம் உயர்வு..!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நாடு முழுவதும் அனைத்து வகையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலைகளின் சுங்க கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண நிர்ணய விதி 2008-ம் படி சுங்கச்சாவடிகளில் வாகனத்திற்கான கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்க கட்டண நிர்ணய விதிகளில் வழிவகை உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 10% முதல் 15% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. நடப்பு நிதியாண்டிலும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5% முதல் 10% உயர்த்தலாம் என நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கான மாதாந்திர பாஸ் திட்டத்தின் கட்டணமும் 10% உயர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் சுங்க கட்டண வசூல் 21% அதிகரித்து ரூ.33,881 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் சுங்க கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Toll fee hike across India from April1


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->