ஆந்திரா, தெலுங்கானாவில் தொடரும் சோகம் !...பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!...சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கனமழையின் காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து சாப்ரா மற்றும் புதுடெல்லிக்கு சென்று, வர கூடிய ரெயில்கள் உள்பட 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி தெலுங்கானாவில் 15 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும் என மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் கனமழையை முன்னிட்டு ஐதராபாத் நகரில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy continues in Andhra Telangana The death toll rises to 27 Chandrababu Naidu inspects in person


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->