ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைப்பு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளன. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 2016-ம் ஆண்டில் போர் கப்பல்கள் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, ரஷ்யாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் 2018-ல் இரண்டு கப்பல்களின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. 

கரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவாக இந்தப் பணிகளில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ரஷ்யாவில் இரண்டு போர்க்கப்பல்கள் மட்டும் தயாரிக்கவும், மீதமுள்ள இரண்டு கப்பல்களை இந்தியாவின் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன் படி, தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் "INS துஷில்" டிசம்பர் மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது, மேலும் இரண்டாவது கப்பல் "INS துமால்" அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய போர்க்கப்பல்கள் நவீன அணு ஆயுதங்களான பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்துள்ளதுடன், எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. ஹெலிகாப்டர் தரிப்பிடம் கொண்டுள்ள இந்த போர்க்கப்பல்கள் நீர்மூழ்கிகளை ஹெலிகாப்டர்கள் மூலமாகத் தாக்குவதற்கான சாத்தியம் பெற்றுள்ளன. 4,000 டன் எடை கொண்ட இவை, 409 அடி நீளம் மற்றும் 50 அடி உயரம் ஆகிய அம்சங்களுடன், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 30 நாட்கள் வரை கடலில் தொடர்ந்து பயணிக்க முடியும்.

இந்தியாவின் பினாகா ஏவுகணை அமைப்பும் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்மீனியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஏவுகணைகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன, மேலும் தற்போது பிரான்சும் இந்தியாவின் பினாகா ஏவுகணைகளை தனது ராணுவத்தில் இணைக்க விருப்பம் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two new warships built in Russia at a cost of Rs 8000 crore will soon join the Indian Navy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->