ஒடிசாவில் இறந்த பெண்ணின் உடலை சாப்பிட்ட 2 போதை ஆசாமிகள் கைது.!! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் இறந்த பெண்ணின் உடலை சாப்பிட்ட 2 போதை ஆசாமிகள் கைது.!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுஸ்மிதா சிங் என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடல் பந்தா சாகி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் உடல் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே தந்துனி கிராமத்தைச் சேர்ந்த மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் இருவரும் சடலத்தின் சதைகளை சாப்பிட்டுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அடித்து சரமாரியாகத் தாக்கி இரண்டு பேரையும் மின் கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இருவரையும் அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளம் பெண் மதுஸ்மிதாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால் தங்களுக்கு அதீத சக்தி கிடைக்கும். அதன் காரணமாகவே அந்த பெண்ணின் உடலை நாங்கள் இருவரும் சாப்பிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் இரண்டு பேரும் இப்படி ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for ate died woman body in odisa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->