5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஜம்முவில் 2 பேர் கைது.!
two peoples arrested for drugs kidnape in jammu kashmir
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி, மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடுக்கு அருகே உள்ள நவ்ஷேரா செக்டார் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் கூட்டு சோதனை நடத்தினர்.
அப்போது இரண்டு பேர் சந்தேகப்படும் வகையில் வந்துள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் இருந்து 5.50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சஜன் குமார் மற்றும் சுபாஷ் சந்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேபோல், ஜம்முவின் அர்னியா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் டிரோன் மற்றும் அரை கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
English Summary
two peoples arrested for drugs kidnape in jammu kashmir