EMAIL க்கு போட்டி.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.இதையடுத்து எலான் மஸ்க் தலைமையிலான, உலகின் மிகப் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, 'டெஸ்லா' கடந்த ஜனவரி மாதத்தில், மெய்நிகர் நாணயமான, 'பிட்காய்ன்' மீது, 10 ஆயிரத்து, 950 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், பணம் கொடுப்பதற்கு பதிலாக, பிட்காய்ன் செலுத்தி, டெஸ்லா காரை வாங்கும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிட்காய்ன் மதிப்பு மேலும் எழுச்சி காண துவங்கி இருக்கிறது.

அண்மையில், எலான் மஸ்க், பிட்காய்ன் முத்திரையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அத்துடன், 'டாகிகாய்ன்' எனும் வேறொரு மெய்நிகர் நாணயம் குறித்த மீம்ஸையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் பிட்காய்ன் மீது கோடிக் கணக்கில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. விரைவில், டெஸ்லா காரை பிட்காய்னை கொடுத்து வாங்க முடியும் என அறிவித்து இருந்தாலும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட அளவில் மட்டுமே அவற்றை பெற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் துவங்கப் பட்டால், இனி பணமாக செலுத்தாமல், பிட்காய்னை செலுத்தியே, டெஸ்லா கார் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் வாங்கிக் கொள்ள முடியும். நிறுவனத்தின் பணப்புழக்கத்தை எளிதாக்கி கொள்ளவும், வருவாயை மேலும் பெருக்கிக் கொள்ளவும், தங்களது முதலீட்டுக் கொள்கையை மேம்படுத்தி அமைத்திருப்பதாக, டெஸ்லா தெரிவித்துள்ளது.

டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியது. இதன்மூலம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

COMPETITION FOR EMAIL Elon Musk Announces Action


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->