இனி நீட் தேர்வு வேண்டாம்! ரத்து செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகளில் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீட் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள நிலையில், முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்

மேலும் அவரின் அந்த கடிதத்தில், பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால்  முழு கவனத்துடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

மாநில அரசுகள் நடத்தி வந்த மருத்துவ படிப்புக்கான தேர்வுகளில் எந்த குளறுபடிகளும், பிரச்னைகளும் ஏற்படவில்லை. எனவே மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

நடைமுறையில் உள்ள தேர்வு முறை பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது. இது பணம் செலுத்தக்கூடிய பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது.

அதே நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச்சேர்ந்த திறமையான மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என்று தனது கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Mamata Banerjee letter to PM Narendra Modi for Neet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->