பெண் மருத்துவர் விவகாரம் : கொலைக்குற்றவாளிகளை மம்தா பானர்ஜி பாதுகாக்கிறார்?
Woman Doctor Issue Mamata Banerjee Protects Murder Convicts
கொல்கத்தாவில் உள்ள கே.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவர், கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விளக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் கொலைக்குற்றவாளிகளை மம்தா பானர்ஜி பாதுகாப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு இன்று 12 மணி நேர அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 வரை போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவினை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Woman Doctor Issue Mamata Banerjee Protects Murder Convicts