கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி : அடுத்தடுத்து மூன்று திருமணம் - கணவரை ரவுண்டு கட்டிய மனைவிகள்.!
young man arrested for get three marriage in krishnagiri
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி : அடுத்தடுத்து மூன்று திருமணம் - கணவரை ரவுண்டு கட்டிய மனைவிகள்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி தாலுகாவில் சின்ன லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக். வேன் ஓட்டுநரான இவருக்கும், உத்தனப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், கார்த்திக் தனக்கு திருமணமானதை மறைத்து பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். அவர்களில் ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து, அவரை வேறு ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடி வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கார்த்திக், மூன்றாவதாக விவசாய வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணை ஏமாற்றி கோயிலில் வைத்து தாலி கட்டி அவரையும் வேறொரு பகுதியில் குடி வைத்துள்ளார். கார்த்திக்கின் இந்த நாடகம் குறித்து தகவலறிந்த உறவினர் ஒருவர் அதை அவரது மனைவிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மூன்று பேரும் தங்களது பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கார்த்திக்கை கைது செய்தனர்.
பின்னர், அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man arrested for get three marriage in krishnagiri