நடுரோட்டில் காரின் மேல் பட்டாசு வெடித்துச் சென்ற வாலிபர்கள் - டெல்லியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் இளைஞர்கள் சிலர் தங்களது எஸ்யூவி காரின் மேல் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால், சாலையில் பயணம் செய்த சக வாகன ஓட்டிகள் பெரும் பதற்றம் அடைந்தனர். 

அதுமட்டுமல்லாமல், வேகமாக சென்று கொண்டிருந்த காரின் உள்ளே இருந்து இளைஞர் ஒருவர் பட்டாசுகளை கொளுத்தி காரின் மேற்பகுதியில் தூக்கி வீசியவாறு சென்றுள்ளார். இந்த காட்சிகளை பின்னால் வந்த சக வாகன ஓட்டி ஒருவர் பதிவு செய்துள்ளார். 

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து குருகிராம் போலீஸார் இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று காவல்துறையால் அடையாளம் காண முடியவில்லை.

இதற்கிடையே அந்த இளைஞர்கள் இந்த செயலை அறிந்து காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என்பதால், காரின் நம்பர் பிளேட்டை கழற்றி வைத்துவிட்டு பயணம் செய்துள்ளனர். ஆனாலும் போலீசார், வீடியோவை வைத்து காரை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths bursting firecrackers on car roof in delhi gurugram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->