ஆரோக்கியமான சுவை நிறைந்த "சோயா பீன்ஸ் தோசை".! இன்றே ட்ரை பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


மிகவும் ருசியான ஆரோக்கியம் நிறைந்த சோயா பீன்ஸ் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 2 கப் 

கேரட் - 1

வெங்காயம் - 1 

தக்காளி - 1 

அரிசி மாவு - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுமார் இரண்டு மணி நேரம் சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கேரட்டை துருவிக்கொள்ளவும். இதையடுத்து மிக்சியில், ஊறிய சோயா பீன்ஸ், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அரைத்த மாவில், துருவிய கேரட், சீரகம், வெங்காயம், தக்காளி, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான சோயா பீன்ஸ் தோசை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy and tasty Soya bean dosa recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->