ஆரோக்கியமான கேழ்வரகு பீட்ரூட் தோசை.! செய்வது எப்படி.?
Healthy ragi beetroot dosa recipe
ஆரோக்கியம் நிறைந்த சுவையான கேழ்வரகு பீட்ரூட் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 மேசைகரண்டி
வெங்காயம் - 1
துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி
பச்சை மிளகாய் - 1
கொத்தும்மல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
பின்பு அரை மணி நேரம் கழித்து, தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்தால் சத்து நிறைந்த கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.
English Summary
Healthy ragi beetroot dosa recipe