சத்தான சுவைநிறைந்த "முளைக்கீரை சாதம்".. ரெசிபி இதோ! - Seithipunal
Seithipunal


சத்து நிறைந்த டேஸ்டியான முளைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

முளைக்கீரை - ஒரு சிறிய கட்டு

பாசுமதி அரிசி - 1 கப்  

ஏலக்காய் - 2

பூண்டு - 4 பல்

துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

பட்டை, கிராம்பு - சிறிதளவு

நெய் - தேவையான அளவு

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:

முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து அடுப்பில் கடாய் வைத்து, தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுக்கவும். இதையடுத்து வருத்த பொருட்களை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

பிறகு, குக்கரில் நெய் விட்டு, கீரையை சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த கலவை, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவிய அரிசி, வேகவைத்த துவரம் பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கினால் சத்தான முளைக்கீரை சாதம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make healthy mulaikeerai satham


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->