சூப்பரான சுவையில் சத்தான "உளுந்து சட்னி".! செய்வது எப்படி.?
How to make healthy Ulundu chutney
சூப்பரான சுவையில் இட்லி தோசைக்கு ஏற்ற சத்தான உளுந்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
தக்காளி -1
எண்ணெய், உப்பு - தேவையான
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்பு அதே கடாயில் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
இதையடுத்து அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு உப்பு மற்றும் பொன்னிறமாக உளுந்து சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்தால் சுவையான ஆரோக்கியம் நிறைந்த உளுந்து சட்னி ரெடி.
English Summary
How to make healthy Ulundu chutney