ஆரோக்கியமான கோதுமை மாவு வெஜிடபிள் தோசை..! செய்வது எப்படி.?
How to make healthy Wheat vegetable dosa
ஆரோக்கியம் நிறைந்த சுவையான கோதுமை மாவு வெஜிடேபிள் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம்- 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமை மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் வதங்கியதும் கேரட், பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதையடுத்து நன்கு வதங்கியதும், அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான கோதுமை மாவு வெஜிடபிள் தோசை ரெடி.
English Summary
How to make healthy Wheat vegetable dosa