நன்மைகளைத் தரும் வைட்டமின் மாத்திரைகளால் இவ்வளவு ஆபத்துகளா.?! உஷார்.! - Seithipunal
Seithipunal


உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போது அதை பலரும் மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வது வழக்கம். விட்டமின்கள் உடலுக்கு மிகவும் முக்கியம். அவை குறைவதால் பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாகலாம். 

அதற்காக நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தீர்வாகாது. அதிக அளவில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

அதைத்தான் விட்டமின் டாக்ஸிட்டி (Vitamin Toxicity) என்று கூறுவார்கள். இது மிகவும் அபாயகரமான நிலை. உங்கள் உடலில் அதிக விட்டமின் டி இருந்தால் ரத்தத்தில் கால்சியம் அதிக அளவில் சேர்வதால் நமக்கு பலவீனம், குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்டவை ஏற்படலாம். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றலாம். இந்த உணர்வுக்கு ஹைபர்கால்சீமியா என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது எலும்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை உடலுக்கு ஏற்படுகிறது. இதனால் உடல் வலி மற்றும் கால்சிய கற்கள் உடலில் ஏற்படும்.

 

மொத்தமாக 13 விட்டமின்கள் இருக்கின்றன. தண்ணீர் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களாக இவை இருக்கின்றன. இது பற்றி சுகாதார நிபுணர்கள், "நீரில் கரையக்கூடிய விட்டமின்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடல் திசுக்களில் அவை சேர்வதில்லை. இதனால் இது பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை."என்று கூறுகின்றனர்.

அத்தகைய நீரில் கரையக்கூடிய விட்டமின்களின் பட்டியல் இதோ : 

வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்)
வைட்டமின் B5 (பாந்தோதெனிக்
வைட்டமின் பி1 (தியாமின்)
வைட்டமின் B7 (பயோட்டின்)
வைட்டமின் B3 (நியாசின்)
 அமிலம்)
வைட்டமின் B6 (பைரிடாக்சின்)
வைட்டமின் பி12 (கோபாலமின்)
வைட்டமின் B9 (ஃபோலேட்)

கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் உடலில் அவ்வளவு எளிதில் கரையாது. இவைதான் உடலில் நச்சுத்தன்மை ஏற்பட காரணம். 

இவ்வாறு கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களின் பட்டியல் : 

வைட்டமின் ஏ

வைட்டமின் ஈ

வைட்டமின் டி

வைட்டமின் கே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disadvantages of vitamin tablets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->