எலும்புகளுக்கு வலு தரும் கருப்பு உளுத்தங்கஞ்சி.! இப்படி செஞ்சு சுவை அட்டகாசமான இருக்கும்!
Healthy and tasty black Urad dal Porridge Recipe
சுவையான கருப்பு உழுந்தங்கஞ்சி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இதனை மாதத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் நன்றாக உறுதி பெறும்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப்
கருப்பு அரிசி - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 3
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
ஒரு வாணலியில் ஒரு கப் கருப்பு உளுந்து மற்றும் அரை கப் கருப்பு அரிசி சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.
நன்றாக வறுபட்டதும் ஸ்டவ்வை அனைத்து வருத்த உளுந்து மற்றும் அரிசியுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.
இப்போது மற்றொரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் வெல்லம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். பாகு நன்றாக பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது மிக்சியில் வறுத்து ஊறவைத்த உளுந்து மற்றும் அரிசியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்த உளுந்து மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் வெல்ல பாகு சேர்த்து நன்றாக கொதித்து வந்ததும் மூன்று ஏலக்காயை பொடி செய்து சேர்த்து சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இந்தக் கலவை நன்கு கொதித்து வந்ததும் ஸ்டவ்வை அணைப்பதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சிட்டிகை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான மற்றும் சத்தான கருப்பு உளுந்தங்கஞ்சி ரெடி. குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் தேங்காய் துருவல் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
English Summary
Healthy and tasty black Urad dal Porridge Recipe