ஓட்ஸ் மில்க் , தேங்காய் பால் - இரண்டில் எது உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது..?! - Seithipunal
Seithipunal



பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் பசும் பாலுக்குப் பதிலாக தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் ஓட்ஸ் பால் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார்கள். 

இவற்றில் எது சிறந்தது என்று இங்கு பார்ப்போம். 

ஓட்ஸ் பால் :

பசும் பாலை போலவே அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்தது தான் ஓட்ஸ் பால். மேலும் இதில் நார்ச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. மேலும் பீட்டா க்ளுக்கான், கால்சியம், வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கியுள்ளன.

பசும்பாலைப் போலவே இருக்கும் இந்த ஓட்ஸ் பாலும், லேசான இனிப்பு சுவையுடனும், க்ரீமியாகவும் இருக்கும். மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். லாக்டோஸ் அழற்சி உள்ளவர்களுக்கு ஓட்ஸ் பால் ஆகச் சிறந்த மாற்றாக இருக்கும். 

தேங்காய் பால் : 

மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் அதிகளவில் நிறைந்துள்ள தேங்காய் பாலில், ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள், புரதம் ஆகியவையும் அடங்கியுள்ளன. மேலும் கொழுப்பு அமிலங்களும் அதிகளவில் நிறைந்துள்ளதால் இதில் ஏராளமான கலோரிகளும் நிறைந்துள்ளன. 

தேங்காய் பாலானது குறைவான அளவு சாப்பிடவும் வயிறு நிறைந்த திருப்தியைக் கொடுக்கும். இது அதிக கிரீமியாகவும், சுவையாகவும் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய் பால் தான் அதிகமாக பரிந்துரைக்கப் படுகிறது. 

இவர்கள் கொழுப்பு நிறைந்த பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தேங்காய் பாலில் அடங்கியுள்ள சாச்சுரேட்டட் கொழுப்பானது இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல. எனவே அவர்கள் தேங்காய் பாலை தவிர்ப்பது நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Which One Is Best Oat Milk Or Coconut Milk For People Want To Reduce Weight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->