மக்கள் தலைவி.. வாழ்க..! நடிகை கஸ்தூரியை வரவேற்ற ஆதரவாளர்கள்!
kasturi arrest makkal thalaivi vazhaka
நவம்பர் 3ஆம் தேதி சென்னையில், இந்து மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, பேசும் போதுதெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த கஸ்தூரியை, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கஸ்தூரியின் சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனிமையில் வாழ்வதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், சிறையில் அடைத்தால் தனது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீது நீதிமன்றம் விசாரணை செய்து, மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு நிபந்தை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் , இன்று மாலை நடிகை கஸ்தூரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது அவரை வரவேற்ற அவரின் ஆதரவாளர்கள "மக்கள் தலைவி வாழ்க... மக்கள் தலைவி வாழ்க.." என்று கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துவிட்டு சென்றார்.
English Summary
kasturi arrest makkal thalaivi vazhaka