கடைசி நேரத்தில் கட்சி தாவிய வேட்பாளர்கள்.! அதிர்ச்சியில் பிரபல அரசியல் கட்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. நாளை வேட்புமனு பரிசீலனை மற்றும் வருகின்ற ஏழாம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சியின் பாஜக வேட்பாளர்கள் கடந்த 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 4-வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ரேணுகாதேவி என்பவர், திடீரென திமுகவுக்கு கட்சி தாவி, திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதேபோல், அதே ஆறுமுகநேரி பேரூராட்சியின் 15வது வார்டில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சண்முகம், திடீரென நேற்று அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சண்முகம் பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சியில் பாஜக வேட்பாளர்கள் இருவர் அதிமுக, திமுகவுக்கு கட்சி தாவி களமிறங்கி இருப்பது, பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AARUMUKANERI BJP CANDIDATE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->