வாழ்த்து சொன்னதோடு.. "சூப்பர் ஸ்டாரை" இழுத்து விட்ட கஸ்தூரி.!! வைரலாகும் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும் அதனை பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும் அறிவித்துள்ளார். 

மேலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டு உள்ள படத்தில் நடித்துவிட்டு முழு நேரம் அரசியலில் ஈடுபட போவதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும், நமது இலக்கு சட்டமன்ற பொது தேர்தல் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தளபதி விஜயை வரவேற்கிறோம். ஒரு சுவாரசியமான அரசியல் சூழலில் தமிழக அரசியலுக்கு வருகிறார். ஒருவேளை சிறந்த நேரமாக கூட அமையலாம்.

விஜயால் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்போம். சமீபகால வரலாற்றில் பல சூப்பர் ஸ்டார்கள் அரசியலில் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். விஜயின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும். வாழ்த்துக்கள்" என தனது கருத்தை பகிர்ந்து உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress kasthuri opinion on Vijay politics entry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->