நல்லது செய்யும் எண்ணம் திமுக அதிமுகவுக்கு இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் திமுக அதிமுகவுக்கு இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறி மாறி மாறி அதிமுக, திமுகவினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்றும் உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கூடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மனு மீதான விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. 

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்வதாக தெரிவித்தது. 

மேலும், இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்று நீதிபதி வேல்முருகன் கண்டனம் தெரிவித்ததுடன், அதிமுக, திமுக தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள மாறி மாறி குறைகளை தெரிவித்து வருகின்றனர், இரு கட்சிகளும்  மாறி மாறி குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMK Chennai HC Condemn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->