#BigBreaking | அதிமுக வேட்பாளருக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எவ்வளவு? ஓபிஎஸ் தரப்பு செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக, கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய படிவத்தின் படி, தென்னரசு களமிறங்க உள்ளார். 

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுகுழு உறுப்பினர்கள் சுமார் 2501 பேர் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்ற ஓபிஎஸ் தரப்பினர் 128 பேர், வேட்பாளர் தென்னரசுக்கு எதிராக படிவத்தை தரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 15 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், இரண்டு பேரின் பதவிக்காலம் காலாவதியாகி உள்ளது வேண்டும், இரண்டு பேர் மாற்றுக் கட்சியில் இணைந்துள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Side Candidate Simple 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->