#ஈரோடு : "திமுக பணம் கொடுக்கும். அதை தடுக்க கூடாது." ஸ்டாலின் உத்தரவு.?! கள ஆய்வின் பின்னணி.!  - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அண்டை மாவட்டங்களின் மூலம் பணப்பட்டுவாடா நடக்கும் என்றும், அதை தடுக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "இந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்து மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். இந்த தேர்தலில் திமுக மலிவான ஃபார்முலாவை கையாண்டு வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேலம் மண்டல அளவிலான கள ஆய்வை இத்தனை நாளாக ஏன் மேற்கொண்டு இருக்கிறார் ஏன் தெரியுமா?

 தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களை அழைத்து கூட்டம் போட்டார். ஏனெனில், ஈரோடு தொகுதிக்கு பக்கத்தில் உள்ள மாவட்டங்கள் தான் இவை. இந்த மாவட்டங்கள் வழியே திமுகவினர் பண பட்டுவாடா செய்வார்கள்.

அதை யாரும் தடுக்க கூடாது என்று கூறத்தான் முதல்வர் இந்த கள ஆய்வை மேற்கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றி விட முடியாது. சட்ட ஒழுங்கானது தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது. கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து போலியான வெற்றியை பெற திமுக துடிக்கிறது. அது நடக்காது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk ex Minister jayakkumar about Erode by election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->