முதலீடுகளை ஈர்க்கவா.. குடும்ப சுற்றுலாவா.. முதல்வர் பயணம் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்.!
ADMK Jayakumar speech about MK Stalin Dubai tour
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துபாய் சென்றுள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
துபாயில் எக்ஸ்போ நடந்து வரும் நிலையில் எக்ஸ்போவை பார்வையிடவும், மாநிலத்திற்கான முதலீடுகளை உற்பத்தி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நான்கு நாட்கள் அரசுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவரை அழைத்துச் செல்ல துபாய் அரசு பிஎம்டபிள்யூ காரை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் முதல்வரின் துபாய் பயணம் குறித்து விமர்சித்துள்ளனர் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் சென்று இருப்பது முதலீடுகளை ஈர்க்கவா.? அல்லது அவரது சொந்த குடும்ப பயணத்திற்காகவா என்பது தெரியவில்லை. தேவையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்டு வருகிறது" என்று விமர்சித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar speech about MK Stalin Dubai tour