"பொதுச்செயலாளர் தேர்தல்" உள்ளிட்ட அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் என்னென்ன? வெளியான பரபரப்பு தகவல்.!
admk july meet ops vs eps
வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
* ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
* தி.மு.க. ஆட்சி தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம்
* ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான தீர்மானங்கள்
* மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி நடைமுறைப்படுத்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்
* அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் காலாவதியாகும் தீர்மானம்
* பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் தீர்மானம்
* தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளரை கூட்டத்திலேயே தேர்ந்தெடுக்கவும் ஏற்பாடு
* அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு
* அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை ரத்துசெய்யும் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம்
* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியது தொடர்பாக தி.மு.க. அரசுக்கு கண்டனம்
* அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசை வலியுறுத்துவது தீர்மானம்
* கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முயற்சிப்பதை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
* நெசவாளர்கள் பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும்.
* அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
admk july meet ops vs eps