#BigBreaking || இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
admk ops vs eps chennai hc judgement twin leaf
உட்கட்சிப் பிரச்சனைகள் சிக்கி உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூன் 28ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அது குறித்து எந்த பதில் மனுவும் வரவில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள், "நீங்கள் யார்? அதிமுகவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த வழக்கை தொடர்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.
இந்த வழக்கு என்பது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே தொடரப்பட்டது. இந்த வழக்கு எடுத்துக் கொள்வது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல். இஇந்த வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
admk ops vs eps chennai hc judgement twin leaf