டாஸ்மாக் வருமானத்தில் தான் தேர்தல் செலவா? பகீர் கிளப்பிய அ.தி.மு.க.!
ADMK says Tasmac income election expenditure
டாஸ்மாக்கில் நாள்தோறும் கிடைக்கும் வருமானம் தேர்தல் செலவுக்காக பயன்படுத்துவதாகவும் இதனை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அ.தி.மு.கவின் இன்ப துரை குற்றம் சாட்டியுள்ளார்.
வருகின்ற மக்களவைத் தேர்தல் நடைமுறையை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் அரசியல் கட்சிகள் பணத்தை தண்ணீராக செலவழிப்பது தெரிகிறது.
இந்நிலையில் அ.தி.மு.கவின் இன்ப துரை தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் பொழுது, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வசூல் கருவூலத்தில் சேர்க்கப்படவில்லை.
இதனை தேர்தல் அதிகாரிகள் கருவூலத்தில் சேர்க்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
தேர்தல் செலவுக்காக ஆட்சியாளர்களால் டாஸ்மாக்கில் வரும் பணத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
40 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம்.
ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK says Tasmac income election expenditure