அதிமுக வேட்பாளர் யார்? அறிவிப்பு எப்போது? ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி திடீர் டிஸ்கஸ்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், மாலை 7 மணி அளவில் ஈரோட்டில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நியமனம் குறித்தும் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk eps erodebyelection 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->