ஓபிஎஸ் பதில்மனு., எடப்பாடி பழனிசாமி முறையீடு! இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழுவால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் திங்கள்கிழமை வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் போட்டி வேட்பாளரை களம் இறக்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருகிறார். ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஓபிஎஸ் வேட்பாளரை களம் இறக்காமல், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி முறையிட்டுள்ளார். இவரின் முறையீட்டு மனு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக உச்சநீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தங்களுக்கு சாதகமான அம்சங்களை திரட்டி, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் வருகிற திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வருகின்ற திங்கட்கிழமை நடக்க உள்ள வழக்கு விசாரணையின் போது, கடுமையான ஆட்சேபங்களை தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் நீடிப்பதால் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, இரட்டை இலை சின்னம் யார் கைக்கு கிடைக்கும்? வருகின்ற ஏழாம் தேதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளில் தீர்ப்பு அளிக்குமா? அதிமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? ஓ பன்னீர்செல்வம் போட்டி வேட்பாளரை அறிவிப்பாரா? போன்ற பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் அதிமுகவினர் இடையே எழுந்துள்ளது.

மேலும் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி தொடந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு, இந்த மனு மீதான உத்தரவு வருகின்ற பிப்ரவரி 7ஆம் (வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்) தேதிக்குள் வருமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்கி போட்டியிடுவது என்பது மட்டும் உறுதி. அது இரட்டை இலை சின்னம் கிடைக்கிறதோ, இல்லையோ தேர்தலில் போட்டி உறுதி என்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பின் அரசியல் வட்டாரம்.

அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு, எக்காரணம் கொண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் செல்லக்கூடாது என்று கங்கணம் கட்டி செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMk EPS vs OPS Sc Case ops Side 28012023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->