அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தற்போது 12 மண்டலனாக பிரித்து அதற்கான ஒப்புதலை எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் மண்டலங்கள் மற்றும் வெற்றிக்கு உட்பட்ட மாவட்டங்கள் திருத்தி அமைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்திற்கு உட்பட்டு வடசென்னை வடக்கு (கிழக்கு), வடக்கு (மேற்கு), தெற்கு (கிழக்கு), தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தெற்கு (கிழக்கு), தெற்கு (மேற்கு), புறநகர் என 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்திற்கு உட்பட்டு வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிழக்கு, மேற்கு திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம் என பிரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு எனவும், சேலம் மண்டலத்திற்கு உட்பட்டு சேலம் மாநகர், புறநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு எனவும், ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்டு ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, நாமக்கல் கரூர் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்திற்கு உட்பட்டு கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, நீலகிரி, திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு எனவும், திருச்சி மண்டலத்திற்குட்பட்டு திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை வடக்கு, தெற்கு எனவும், தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்டு தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, மதியம், தெற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் எனவும்,
மதுரை மண்டலத்திற்கு உட்பட்டு மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு எனவும், விருதுநகர் மண்டலத்திற்கு உட்பட்டு விருதுநகர் கிழக்கு, மேற்கு, சிவகங்கை, இராமநாதபுரம் எனவும், திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்டு திருநெல்வேலி மாநகர், புறநகர், தென்காசி வடக்கு, தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK IT Wing divided 12 regions