அதிமுக தலைமை சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்த தேசத்திற்கே மிகப்பெரிய ஆழ்ந்த சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, நாளை திமுக அரசை கண்டித்து நடைபெற இருந்த போராட்டம் வருகின்ற சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிடப்பட்ட அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

"அதிமுக சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 9.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

வருகின்ற 11.12.2021 - சனிக் கிழமை காலை 11 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK PROTEST Postpone dec


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->