துப்பாக்கி சூடு எதிரொலி., ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் நேற்று தலைநகர் டெல்லிக்கு திரும்பினார். இவருடைய கார் மீரட்டின் சாஜர்சி டோல் பிளாசா அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒவைசி காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒவைசியின் கார் தயார் மட்டும் பஞ்சரானது. இதனையடுத்து மாற்று வாகனத்தை வரவழைத்து, ஒவைசி அங்கிருந்து புறப்பட்டார். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டால், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் ஒவைசி வீட்டிலும், அவர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIMIM chief Asaduddin Owaisi Z Security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->