விவசாயிகளை துன்புறுத்துகிறீங்களே.! நீங்க என்ன கோழைகளா.? திமுக அமைச்சரை விளாசிய அன்புமணி.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தூத்துக்குடி சென்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கடலூரில் நடப்பது என்எல்சி பிரச்சனையோ, நெய்வேலி பிரச்சனையோ கிடையாது. தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கான பிரச்சனை. தூத்துக்குடியில் இருந்த ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாசு ஏற்படுத்தியதாக போராட்டம் நடத்தினோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நானும் போராடினேன். இவ்வாறு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு இன்று ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து அனைத்து இளைஞர்களும், விவசாயிகளும் அங்கு செல்ல வேண்டும். இங்கு போராடியவர்கள் அங்கு சென்று போராட வேண்டும். நாங்களும் இருக்கிறோம், எல்லாரும் சேர்ந்து போராடுவோம். இன்று தக்காளியின் விலை ஒரு கிலோ 150 ரூபாய். 

திமுக ஆட்சியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி அழித்துவிட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு கிலோ அரிசி 500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும். விவசாய நிலங்களை அழித்துவிட்டு வளர்ச்சி என சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. தங்கம் தென்னரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். உங்க வேலை எதுவோ அத பண்ணுங்க. இதெல்லாம் உங்கள் வேலை கிடையாது. நிலத்தை கையகப்படுத்தி விவசாய நிலங்களை அழித்து, விவசாயிகளை அச்சுறுத்தி, 2000 காவல்துறையினரை வைத்து விவசாயிகளை துன்புறுத்துகிறீர்களே.! நீங்கள் என்ன கோழைகளா? 

கோழைகள் தான் இவ்வாறு செய்வார்கள். விவசாயிகளிடம் போய் கேளுங்க.! விவசாயிகள் யாராவது நிலம் கொடுக்கிறார்களா? கோழைத்தனமா 2000 காவல் துறையினரை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை பிடுங்கி நெற்பயிர்களை எல்லாம் நாசம் செய்யும் காட்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது மனதெல்லாம் பொங்கி எழுகிறது. 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சொல்லும் போது கூட உங்களுக்கு எதுவும் வரவில்லையா.? நெற்பயிர்களை அழிக்கும் காட்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது கண்ணீர் வந்துவிட்டது என ஒரு நீதிபதியே கூறுகிறார். நிலத்தை அழித்து விட்டால் உங்களுக்கு சோறு கிடைக்காது என ஒரு நீதிபதியே கூறுகிறார். அப்படி சொல்லியும் கூட இன்று மீண்டும் வேலையை ஆரம்பித்துள்ளனர். இந்த மண்ணில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானியம் திட்டத்தை செயல்படுத்த 10,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் போது முதல் முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்தி மருத்துவர் அய்யா நிறுத்தினார். 

ஸ்டெர்லைட் போன்று டாட்டா டைட்டானியம் நிறுவனம் 100 மடங்கு அபாயகரமானது. அது வராமல் தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. மண்ணையும், மக்களையும் அழிக்கும் எந்த திட்டமும் வளர்ச்சி திட்டம் கிடையாது. சென்னையில் நேற்று ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு காலநிலை மாற்றம் குறித்து நடைபெற்றது. ஆனால் சென்னையிலிருந்து 150 கிலோ மீட்டரில் நிலக்கரிக்காக விவசாய நிலங்களை அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என திமுக அமைச்சரையும், திமுக அரசையும் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani asked DMK minister are you cowards


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->