திருப்பாச்சூர் ஆறுமுகம் மறைவு - அன்புமணி இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


பாமகவின் மூத்த முன்னோடி திருப்பாச்சூர் ஆறுமுகம் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடியான பெரியவர் ஆறுமுகம் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே மருத்துவர் அய்யா அவர்களின் வழியில் பயணித்தவர். 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். 

மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர். அவரது மறைவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

பெரியவர் திருப்பாச்சூர் ஆறுமுகம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Condolence PMK Thirupachur Arumugam death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->