உங்க அப்பாவும் விவசாயி தானே? தங்கம் தென்னரசு மறந்துட்டாரா.? ரவுண்டு கட்டிய அன்புமணி.!! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி சென்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை தூண்டப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் "நாங்கள் 40 ஆண்டுகள் என்எல்சிஐ எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். தங்கம் தென்னரசு அப்பொழுது சின்ன குழந்தை. பள்ளிக்கூடம் படித்துக் கொண்டு நிஜார் போட்டு இருந்திருப்பார். அப்போது இருந்து நாங்கள் என்எல்சி எதிர்த்து போராடி வருகிறோம். இது குறுகிய காலம் கிடையாது. நாங்கள் மட்டும்தான் உண்மையாக, உறுதியாக போராடி வருகிறோம்.

அன்று நாங்கள் நிலம் வழங்கிய மக்களுக்கு இழப்பீடு கூடுதலாக கொடுக்க வேண்டும் என போராடினோம். அடுத்து வேலை வாய்ப்புக்காக போராடினோம். இதுவரை யாருக்காவது வேலை வாய்ப்பு கொடுத்தார்களா.? தங்கம் தென்னரசு கொடுத்தாரா.? இல்ல அவருடைய அப்பா கொடுத்தாரா.? இந்த கேள்வி அவரிடம் கேளுங்கள். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை வேண்டும் என்று தூண்டிவிட்டு கலவரம் போன்ற ஒரு சூழலை உருவாக்கியது காவல்துறை. அதை திட்டமிட்டது தமிழக அரசு.

கடந்த ஓராண்டுகளில் கருத்து கேட்டு கூட்டம், நடை பயணம், விழிப்புணர்வு பிரச்சாரம், பூட்டு போடும் போராட்டம், பொதுக்கூட்டம், முழு கடையடைப்பு, கிராம சபைகளில் தீர்மானம் போடும் நிகழ்வு, 100 விவசாய சங்கங்களைக் கூட்டி கருத்து கேட்டு கூட்டம் நடத்தியுள்ளோம்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன் ஆகிய மூன்று அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு தலைமையில் என்எல்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது அழையா விருந்தாளியாக சென்ற 40 நிமிடம் வாதாடினேன்.

இதெல்லாம் மறந்துட்டாரா தங்கம் தென்னரசு? இதுக்கு என்ன குறுகிய அரசியல் இருக்கு என்பது எனக்கு புரியவில்லை. ஒரு விவசாய நிலத்தை அழிப்பதற்கு எதிராக போராடுவது குறுகிய அரசியலா.? இவருடைய அப்பாவும் ஒரு விவசாயி தானே? சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள்? அப்போ திமுக விவசாயத்திற்கு எதிரான ஒரு அரசு என சொல்லலாமா? எங்களுக்கு எந்த வகை அரசியலும் தெரியாது. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நியாயம், அநியாயம் தான். அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்போம். அதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை" என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani responds to Minister Thangam Thenarasu criticism


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->