அண்ணாமலை திட்டத்துக்கு தடை... ஸ்டாலின் தொகுதியில் நடக்குமா? நடக்காதா? - Seithipunal
Seithipunal


வரும் 5-ந்தேதி திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். 

சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார். 

அதற்காக, கொளத்தூர் தொகுதி பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். ஆனால், அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க முடியாது என்று மறுத்துள்ளனர். 

கொளத்தூரில் போலீசார் விதித்துள்ள தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமா? இல்லை வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு போராட்டம் நடத்தப்படுமா என்று பாஜக தரப்பில் விசாரித்தபோது... திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai protest in kolathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->