ரூ.397 கோடி விஞ்ஞான ஊழல்.. "செந்தில் பாலாஜி வீட்டில் டெண்டர் முடிவு".. கொளுத்தி போடும் அண்ணாமலை.!!
Annamalai Report on tn electric board scam
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் இன்று அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில்டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூபாய் 397 கோடி அளவிலான மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அரசு அதிகாரிகள் துணையோடு கிட்டத்தட்ட 30 ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு டென்டரிலும் ஒரு ரூபாய் கூட மாறாமல் ஒரே தொகையை அனைவரும் ஒப்பந்த புள்ளியில் கூறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 45,000 ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே தொகையை குறிப்பிட்டு இருப்பதை பார்த்ததுமே ஒப்பந்த ஆய்வுக்குழு இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்யாமல் சந்தை மதிப்பை விட மிக அதிக தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ட்ரான்ஸ்பார்மருக்கும் சந்தை மதிப்பை விட சுமார் 4 லட்சத்துக்கும் மேலான அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கில் கொண்டால் சுமார் 397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருடன் இணைந்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த ஊழலில் முக்கிய நபரான காசி என்பவர் மின்வாரியத்தில் கொள்முதல் நிதி பிரிவில் வேலை செய்பவர் என்றும் ஆனால் அலுவலகத்திற்கு செல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தபடியே மின்சார வாரிய ஒப்பந்தங்களை முடிவு செய்வார் எனவும் கூறப்படுகிறது.
இந்த நபர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர் என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அவரது பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஊழல் செய்வதற்காகவே கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்தி அமைச்சர் வீட்டில் இருந்து ஒப்பந்தங்களை முடிவு செய்வது எல்லாம் திறனற்ற திமுக ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம். அமைச்சருக்கும் மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடி தொடர்பில்லாமல் 397 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
உடனடியாக அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் காசி உட்பட இதில் தொடர்புடைய மின்வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த ஊழல் வழக்கு குறித்து தெளிவான தகவல்கள் அனைத்தும் வெளி கொண்டு வந்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து நடவடிக்கை கூறியிருக்கும் அறப்போர் இயக்கத்திற்கு தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai Report on tn electric board scam