வானத்தைப் பார்த்து எச்சில் உமிழ்வதை போல.. துண்டு சீட்டை பார்த்து படிக்கலாமா.!! ஸ்டாலினை வெளுத்த அண்ணாமலை.!!
Annamalai response to MKStalin comments on BJP
திருவாரூரில் நடைபெற்ற நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சி.ஏ.ஜி அறிக்கையை மேற்கோள் காட்டி மத்திய பாஜக ஆட்சியில் 7 ஊழல்கள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களோடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த வாரம் தான் என்னவென்று தெரியாமல் துண்டு சீட்டை பார்த்து அப்படியே ஒப்பிப்பது தர்ம சங்கடத்தை உருவாக்கும், முதல்வர் முத்திரை மு க ஸ்டாலின் மதிக்கும் பதவிக்கு அழகல்ல என்று அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் வழக்கம் போல மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த துண்டு சீட்டை அப்படியே படித்துவிட்டு சென்று இருக்கிறார் முதலமைச்சர்.
கூட்டத்தில் திருடியவன், திருடன் திருடன் என்று கத்திக்கொண்டு முன்னால் ஓடுவது போல ஊழலின் உறைவிடம் திமுகவில் இருந்து கொண்டு ஊழல் என்று பிறரை குறை சொல்வது பொதுமக்களை நகைக்கவைக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டார்.
இன்று ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சி.எஸ்.சி அறிக்கையால் மத்திய அரசின் ஏழு விதமான ஊழல் அம்பலமாகி இருக்கிறது என்று அப்பட்டமாக பொய் சொல்லி இருக்கிறார். சி.ஏ.ஜி அறிக்கையை இதற்கு முன் எப்போதாவது படித்துப் பார்த்திருப்பாரா முதலமைச்சர் என்ற கேள்வி எழுகிறது.
சி.ஏ.ஜி அறிக்கையில் நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறியிருக்கிறதே தவிர ஊழல் முறைகேடு, மோசடி அல்லது முதல்வர் சொன்ன துவாரகா வளைவு சாலை குறிப்பிட்ட நபருக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இடம்பெற்று இருக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்.
துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு வடிவமைப்பு திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல் தான் காரணம் என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். 14 வழி சாலையில் 8 வழித்தடத்தில் மேம்பாலமாகவும், 6 வழி விரைவு சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதால் செலவினம் அதிகரித்துள்ளது என்பது சி.ஏ.ஜி அறிக்கையிலேயே இருக்கிறது.
எதற்காக இந்த மாறுதல் என்பது தான் சி.ஏ.ஜி அறிக்கையின் கேள்வியே தவிர, ஊழலோ, முறைகேடுகளோ நடந்துள்ளது என்று அறிக்கையில் எந்த பக்கத்திலும் கூறப்படவில்லை. சாலைகள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தும் செலவு குறிப்பிட்டதை விட இரண்டரை மடங்கு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் சாலை அமைக்கும் செலவு வியந்து இருக்கிறது என்பதை சி.ஏ.ஜி அறிக்கையே தெளிவுபடுத்திருக்கிறது.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாலைகள் அமைக்க மூலப்பொருள் கிடைப்பது தாமதமாவதால் சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகிறது என்று மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம் காட்டினார் சாலை அமைப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு கேரளாவுக்கு அனுப்புவதில் திமுக அமைச்சர்களுக்கே தொடர்பு இருப்பது மக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சி பணிகளுக்கு உதவாமல் கனிம வளங்களை திருடிக் கொண்டிருப்பவர்கள் மீது முதலமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
சுங்கச்சாவடியில் ஊழல் நடந்திருப்பதாக கூறி இருக்கிறார் முதலமைச்சர். சுங்கச்சாவடியில் எப்படி ஊழல் நடக்கும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். உலக அளவில் ஊழலுக்கான அடையாளமாக விளங்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதில் எல்லாம் ஊழல் செய்ய முடியும் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே சுங்கச்சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை.
மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில் தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் சுங்கச்சாவடிகளும் இதுபோல வசூல் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா.?
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக போகிற போக்கில் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு என்று கூறுவது வானத்தைப் பார்த்து எச்சில் உமிழ்வதைப் போல, ஒரே எண்ணில் பலரின் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்ததால் அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமும் உள்ளது என்பதை கூட அறியாமல் துண்டு சீட்டை பார்த்து படிக்கிறார்.
மத்திய அரசு ஒரே எண்ணில் பல கணக்குகள் இணைப்பது போன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை உறுதி செய்துள்ளது. ஆனால் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள போலி கணக்குகளை சரி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. அதனை செய்ய தவறி விட்டு மத்திய அரசு ஊழல் என்று புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 2ஜி ஊழல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள். ஊழல், முறைகேடு, மோசடி, அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் இருந்தது 2ஜி ஊழல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை. ஊழலின் நடவமாக திமுக ஊழல் அற்ற மக்களுக்கான நேர்மையான மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்துவதை எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என அண்ணாமலை முதல் மு.க ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai response to MKStalin comments on BJP