சனாதன குறித்து சர்ச்சை! உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்! - அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


நேற்று சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொசு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசி அவர் "எதிர்க்கட்சிகளின் கூட்டணி செயல்படும் விதத்தை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ராமன் அருவி கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு, கல் விச்சு, வெடிகுண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. அதேபோன்று உத்தரப்பிரதேசம் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ராமாயணம் மற்றும் சீதைக்கு எதிராக பேசினார்கள். 

இப்போது சனாதன தர்மத்திற்கு எதிராக பேச தொடங்கியுள்ளனர். அவர்கள் இந்து விரோதிகள், சனாதன தர்ம விரோதிகள், ஓபிசி மக்களின் விரோதிகள். உதயநிதி கருத்தை திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஏற்கவில்லை. வெறும் ஓட்டு அரசியலுக்காக நீங்கள் சமூகத்தை பிரித்து உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கீழ்த்தனமாக செயல்படக் கூடாது. உங்கள் கூட்டணியின் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் சமுதாயத்தை பிளவுபடுத்தும் அளவுக்கு கீழ்த்தனமாக செயல்படுகிறீர்கள்" என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AnuragThakur urged Udayanidhi to apologize for commenting on SanatanaDharma


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->