பாஜகவுடன் திமுக போட்டுள்ள டீல்! ஊழல் பட்டியல் ரெடி! முக்காடு போட்டுக் கொண்டு ஓடாதிங்க கோழைகளே - அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


கோழைகளே, பாஜக ஊழல் பட்டியல் இருக்கா என்று முக்காடு போட்டுக் கொண்டு ஓடினால் திமுக ஊழல் பட்டியலை மக்கள் மறந்து விடுவார்களா என்ன? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், "அதிமுக ஆட்சியில் பாஜக நண்பர் அதானி செய்த நிலக்கரி கொள்முதல் ஊழல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் அளித்த புகார் மீது அவர் முதல்வராகி 3 வருடம் கழித்து கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜகவுடன் திமுக போட்டுள்ள டீல் தான் நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணமா?

தமிழக பாஜக MLA நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி 100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் கொடுத்த புகாரில் அந்த ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்து செய்த பத்திரப்பதிவுத்துறை அந்த மோசடியில் ஈடுபட்ட பாலாஜி உட்பட ஒருவர் மீதும் FIR போடவில்லை. பாஜகவுடன் திமுக போட்டுள்ள டீல் தான் நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணமா?

பாஜக அரசின் மோசடி திட்டமான தேர்தல் பத்திர திட்டத்தை அறப்போர் இயக்கம் தீவிரமாக எதிர்த்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளையில் திமுக கமுக்கமாக இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து 500 கோடி நன்கொடை வாங்கி வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் மோசடி திட்டத்திற்கு திமுகவும் உடந்தை என்று சொல்லலாம் தானே.!  

ஆகையால் அறப்போர் இயக்கம் மீது கோழைத்தனமாக அரசியல் சாயம் பூசி திமுக அரசின் தவறுகளை மறைக்க முயற்சி செய்யாமல், அறப்போர் இயக்கம் கொடுத்துள்ள பாஜக, அதிமுக திமுக அரசியல்வாதிகளின் ஊழல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்"  என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Condemn to DMK BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->