ஜார்க்கண்ட்டில் இருகட்டமாக சட்டசபை தேர்தல்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26-ந்தேதியுடன் முடிவடைவதால், மாநில தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி 5-ந்தேதியுடன் முடிவடைவதால், ஜார்க்கண்ட் தேர்தல் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேதிகள் நவம்பர் 13 மற்றும் 20 என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்குகள் நவம்பர் 23-ந்தேதி எண்ணப்படும்.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் அஜித் பவார் கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சி செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly elections in Jharkhand in two phases


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->