ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்! கால் சீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்கள்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக இருந்து, தற்போது முன்னணி நடிகராகவும் வில்லனாகவும் ஒளிரும் எஸ்.ஜே.சூர்யாவின் சினிமா பயணம் மிகவும் எதிர்பார்ப்புடன் நிறைந்துள்ளது.

இயக்குனராக வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், கள்வனின் காதலி படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமாக நிலைநிறுத்தி வருகிறார். 

விஜய்யின் மெர்சல் படத்தில் அவரது கம்பேக் ஒரு மைல்கல் என்றே கூறலாம். அதனைத் தொடர்ந்து சிம்புவின் மாநாடு, விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் வில்லனாக அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இப்போது, எஸ்.ஜே.சூர்யா முன்னணி இயக்குனர்களின் படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் மிரட்டுகிறார். இந்தியன் 2 படத்தில் சிறிய காட்சியில் மட்டுமே இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அவர் இந்தியன் 3 படத்திலும் முக்கிய வில்லனாக திரும்புவார் என்கிற தகவல் ஆர்வத்தை கூட்டியுள்ளது.

மேலும், அவர் பிரமாண்டமாக உருவாகி வரும் ஷங்கரின் *கேம் சேஞ்சர்* படத்தில் ராம் சரணுடன் இணைந்து வில்லனாக நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் L.I.K படத்தில் முக்கிய கதாபாத்திரம், விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்திலும் முக்கியமாக நடித்துவருகிறார். 

கார்த்தியின் சார்தார் 2 மற்றும் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படங்களிலும் முக்கிய வில்லனாக களமிறங்கியுள்ளார். குட் பேட் அக்லி படத்தில் அவரது முன்னாள் ஹீரோ அஜித்துடன் மீண்டும் இணைவது, ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

இவர் மலையாள சினிமாவிலும் தமது முத்திரையை பதிக்கவுள்ளார். விபின் தாஸ் இயக்கத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கும் படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் காட்சியளிக்கவுள்ளார். மேலும், துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் அவர் நடித்துவருவது அவரது மலையாள சினிமா பயணத்தை மேலும் உறுதிசெய்கிறது.

இயக்குனராக வெற்றி பெற்றவர், நடிகராகவும், வில்லனாகவும் தொடர்ந்து தன்னுடைய திறமையை நிரூபித்துவரும் எஸ்.ஜே.சூர்யா, தனக்கென தனி முத்திரையை பதித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி கலைஞராக உருவெடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SJ Suriya giving tough to the heroes Films standing in line Directors waiting for tickets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->