கன்னியாகுமரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதில் இருதரப்பு மோதல்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இதனை நிர்வாகம் செய்வது குறித்து  பல வருடங்களாக இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வகுப்பு வாரியம் ஒப்புதலின் படி நேற்று பள்ளி வாசலில் ஒரு தரப்பினர் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். இன்று மற்றொரு தரப்பினர் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு கன்னியாகுமரி காவல்நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வெளியே இருந்த இரு தரப்பினரின் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கலவரமாக மாறியது. இதனால் இருதரப்பினரும் காவல்நிலையம் முன்பு மோதிக்கொண்டனர்.

காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மற்றொரு தரப்பினர் கன்னியாகுமரி நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த கன்னியாகுமரி காவல் துணை சூப்பிரண்டு ராஜா சமாதானம் செய்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bilateral clash Ramadan prayers in Kanyakumari


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->