சிங்கம் அகெய்ன் படத்தில் ட்ரைலர் வெளியானது.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அந்தப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் "சிங்கம்" என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், இது 'சிங்கம் 2' படத்தின் ரீமேக்காக அல்லாமல் புதிய கதையை வைத்து அந்தப்படத்தை இயக்கி இருந்தார். 

இந்த நிலையில், இயக்குநர் ரோஹித் ஷெட்டி தற்போது மீண்டும் 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். தற்போது அந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singam again movie trailer released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->